இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

இலங்கைக்கு வருகிறார் ஷாருக்கான்

இலங்கை சினிமா

City of Dreams Sri Lanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

City of Dreams Sri Lanka ஒரு அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹோல், ஒரு சூப்பர் சொகுசு நுவா ஹோட்டல் வளாகம் மற்றும் ஒரு சூப்பர் ஸொப்பிங் மோல் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *