எலன் மஸ்க் ஆரம்பித்த புதிய கட்சி

எலன் மஸ்க் ஆரம்பித்த புதிய கட்சி

அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு கட்சிகள் பெரும் சக்தியாக உள்ளன. இந்த இரு கட்சிகளை சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு, மாறி மாறி வெற்றியும் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று […]

Continue Reading
300 க்கு அதிகமானோர் கைது

300 க்கு அதிகமானோர் கைது

ஜூலை 4 ஆம் திகதி இரவு கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் றாகம ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் போது 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இலங்கை பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF), இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. வன்முறை […]

Continue Reading
உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரியத்திலிருந்து நீக்கப்படும் அபாயம்

உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக மும்மொழிகளிலான கல்வெட்டு மற்றும் பாணந்துறை விவாதம் தொடர்பான விசேட எழுத்து மூல ஆவணங்களும் சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிகிரியா மற்றும் காலி கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் […]

Continue Reading
கனடா விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்

கனடா விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்

கானடாவின் பல விமான நிலையங்கள் வியாழக்கிழமை காலை குண்டுவெடிப்பு மிரட்டல்களை எதிர்கொண்ட பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இது விமானங்களை தரையிறக்க வைத்ததோடு பரவலான தாமதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது என்று விமான போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் Nav Canada தெரிவித்தது. கிழக்கு நேரம் காலை 11 மணிக்கு X இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் ஊழியர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைக்கு Nav Canada பாராட்டுத் தெரிவித்தது. விமான நிலையங்களில் இன்னும் சில […]

Continue Reading
செம்மணியில் தோண்ட தோண்ட வருவது என்ன

செம்மணியில் தோண்ட தோண்ட வருவது என்ன

செம்மணி மனித புதைகுழியில் வியாழக்கிழமையும் (03)  சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாளான வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. 34 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே […]

Continue Reading
யுத்த நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்

யுத்த நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்

இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார். சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் […]

Continue Reading
உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப மறுத்த அமெரிக்கா

உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப மறுத்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், பைடன் நிர்வாகத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட சில ஆயுத விநியோகங்களை கியேவுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு நமது நாட்டின் இராணுவ ஆதரவு மற்றும் உதவியை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நலன்களை முதன்மைப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பென்டகனின் உள் மதிப்பீட்டில், உக்ரைனுக்கு உடனடி மாற்றத்தை நியாயப்படுத்த சில […]

Continue Reading
கனடாவிலிருந்து இலங்கை வந்தவர் விபத்தில் பலி

கனடாவிலிருந்து இலங்கை வந்தவர் விபத்தில் பலி

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உணவகம் கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த […]

Continue Reading
மறுபிறவி எடுப்பேன் என உறுதி கொண்ட தலாய்லாமா

மறுபிறவி எடுப்பேன் என உறுதி கொண்ட தலாய்லாமா

திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என தெரிவித்துள்ளார். தலாய்லாமா தனது 90வயதை குறிக்குகமாக இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் […]

Continue Reading
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த போதை

விரைவு தபால் சேவை ஊடாக மிகவும் சூட்சுமான முறையில் மறைத்து பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடந்த 2024 ஜனவரி 1 முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை சர்வதேச விரைவு தபால் சேவை ஊடாக அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து பெறப்பட்ட போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகளை சோதனை நடவடிக்கைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர். […]

Continue Reading